தங்கம் தங்க வேண்டுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தங்கம் தங்க வேண்டுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar சிலர் ஏராளமான நகை வாங்குவார்கள். அது ஒரு வகை சேமிப்பு. பிற்காலத்தில், வீடு வாங்க வேண்டுமானால், நகைகளை விற்றுக் கொள்ளலாம். பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களின் திருமணத்தின் போது கொடுக்கலாம் என எண்ணுவார்கள். ஆனால், சில சமயம், குடும்பத்தில் யாரோ ஒருவர் நோய்வாய்ப்பட்டு, அதீத செலவின் காரணமாகவும் அதை விற்க நேரலாம். இவ்வாறு ஆகாமல், சுபநிகழ்வுகளுக்கு தங்கம் பயன்படவும், வீட்டில் நிரந்தர சேமிப்பாக தங்கியிருக்கவும், ஆவணி தேய்பிறை ஏகாதசியன்று, பெருமாளை எண்ணி விரதமிருக்க வேண்டும். நாளை, ஆகஸ்ட்29, இந்த ஏகாதசி வருகிறது. இதை காமிகா ஏகாதசி என்பர். இந்நாளில், பெருமாளுக்கு தனி துளசிமாலை அணிவித்து வணங்க வேண்டும். வீட்டில் பெருமாள் படம் வைத்து, சுத்தமான துளசி துõவி, விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது விஷ்ணு 108 போற்றி சொல்ல வேண்டும். பட்டினி விரதம் இருக்க முடிந்தவர்கள் உணவைத் தவிர்க்கலாம். இந்த விரதத்தால், வீட்டில் தங்கம் தங்கும். இந்நாளில், புதிதாக தங்கநகையும் வாங்கலாம்.