வீடு தேடி வரும் வெற்றி தேவதை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
வீடு தேடி வரும் வெற்றி தேவதை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar இன்று ஆவணி அமாவாசை. ஜெகத்தை ஆளும் யோகம் தரும் மகம் நட்சத்திரத்தில் வேறு வருகிறது. ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை அளவுக்கு மற்ற அமாவாசைகளுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. மாதம் தோறும் அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்கள் இதற்கு விதிவிலக்கு. ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் மிக்க பலத்துடன் இருப்பார். இம்மாதத்தில், வரும் அமாவாசையன்று, நம் முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும், அவர்களை நினைவு கூரும் வகையிலும், நம் பசி தீர்த்த அவர்களின் பசி தீரும் வகையிலும், சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் கொடுத்தாலே போதும். அவர்கள் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசியளிப்பர். ஆவணி மாத தர்ப்பணத்தின் பலன்கள் பல. வீட்டில் ஏழ்மை நிலை நீங்கி, செல்வச் செழிப்புக்குரிய பாதை திறக்கும். வீட்டில் கல்யாணமாகாத கன்னிகளின் கவலை அகலும் வகையில், நல்ல இடத்து சம்பந்தம் ஏற்படும். கையில் பணம் தங்க மறுக்கிறதே என்ற நிலை மாறும். தொழில், வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நொறுங்கும். இவ்வளவு பலன் இருக்கும் போது, ஆவணி மாத அமாவாசையான இன்றும் முன்னோர்களை வழிபட்டு, மதிய வேளையில் அவர்களுக்கு படையலிட்டு, அதில் சிறு பகுதியை காகங்களுக்கும் அளியுங்கள். வெற்றி தேவதை வீடு தேடி வருவாள்.