நேரமில்லை என சொல்லாதீர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நேரமில்லை என சொல்லாதீர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar “கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?” என சிலரைக் கேட்டால், “எனக்கிருக்கும் வேலை பிசியில் கோயிலுக்கு போக ஏது நேரம்,” என சிலர் பந்தாவாக பதில் சொல்வார்கள். இது ஏற்கத்தக்க வாதம் அல்ல. இவர்களுக்கு டிவி பார்க்க நேரம் இருக்கும். மொபைலை பார்த்து பார்த்து பரவசமடைய நேரம் இருக்கும். பணம் எங்கே கிடைக்கும் என அலைய நேரமிருக்கும். ஆனால், ஐந்தே ஐந்து நிமிடம் கோவிலுக்கு செல்ல...ஏன்...வீட்டில் கூட கடவுளை வணங்க நேரமிருக்காது. இவர்களுக்கு ஒரு யோசனை...தங்கள் அலுவலகம் செல்லும் வழியிலோ, வீட்டின் அருகிலோ பிள்ளையார் கோயிலாவது இருக்கத்தான் செய்யும். அங்கே சென்று வழிபட்டாலே கோயிலுக்குச் சென்ற பலன் கிடைத்து விடும். துõரத்தில் தெரியும் கோபுரத்தை வணங்கினால், இறைவனின் திரவடியையே வனணங்கியதாக அர்த்தம். ஆனாலும், போகிற அவசரத்தில் ஒற்றைக்கையால் வணங்காமல், வண்டியை விட்டு இறங்கி, இரண்டே நிமிடம் தியானித்து விட்டு செல்லுங்கள். மனதுக்கு நிம்மதியாக இருக்கும். பணிகள் தடையின்றி நடக்கும்.