தீர்க்காயுசாக இருக்க ஆசையா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தீர்க்காயுசாக இருக்க ஆசையா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar தீர்க்காயுசாக இருக்க ஆசையா? சிலருக்கு தீராத நோய் இருக்கும். சர்க்கரை வியாதி வந்தவர்களுக்கு கை, கால்களில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதை அகற்ற வேண்டி வருகிறது. சிலருக்கு இருதய நோய். அது மீண்டும் தாக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. புற்றுநோய் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சிலருக்கு பிரச்னைகளை சந்திக்கும் தைரியம் இல்லாமல் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. நோயுற்றவர்கள் மட்டுமல்ல, அனைவருமே தங்கள் ஆயுளை நீட்டிக்க மிருத்யுஞ்ஜய யாகம் செய்ய வேண்டும். மிருத்யுஞ்ஜய என்றால் இறப்புக்கு அஞ்சாதது, சாவை வென்றது என்று பொருள். சிவனுக்கு மிருத்யுஞ்ஜயர் என்ற பொருள் உண்டு. அழிக்கும் கடவுளான அவருக்கே நம் ஆயுளை நீட்டிக்கும் உரிமை உண்டு. எனவே அவரிடம் ஆயுள் நீட்டிப்பு வேண்டி இந்த யாகத்தை நடத்துவர். தகுதியான புரோகிதர்களைக் கொண்டு, பொருடசெலவு பாராமல் இதை நடத்துவது நல்லது. செலவழிக்க முடியாதவர்கள்,. திருக்கடையூர் சிவனை வணங்கி, ஆயுள் நீட்டிப்பை வேண்டலாம்.