உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் திருக்கோவிலின் 53-வது பிரமோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ திருக்கோவில். இந்த திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு 53-வது பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது. தொடர்ந்து 15-ம் தேதி ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ மாலோல நரசிம்மர் சிறப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை