முருகப்பெருமானின் பெண் வடிவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
முருகப்பெருமானின் பெண் வடிவம் நவராத்திரி காலத்தில் முருகனின் பெண் வடிவமான கவுமாரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இவள் சப்த கன்னியரில் ஒருத்தி ரத்தின மகுடம் அணிந்திருப்பாள் நான்கு கரங்களில் இரண்டு பக்தர்களைக் காக்கும் அபய கரமாகவும் வரமளிக்கும் வரத கரமாகவும் உள்ளன மற்ற கைகளில் வேர் அங்குசம் தாங்கியிருப்பாள் குங்கும நிறமுள்ள இவளுக்கு சிவப்பு பட்டு பிடிக்கும் வீரத்திற்கு அதிபதி மயில் கொடி ஏந்தியவள் வாகனமும் மயில் இவள் ரத்தத்திற்கு அதிபதி ரத்தம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இவளை வணங்கி நிவாரணம் பெறலாம் பசுக்களுக்கு கோமாரி என்ற நோய் வரும் இதனால் பால் சுரப்பது குறையும் பால் உற்பத்தி குறைந்தால் குழந்தைகள் சிரமப்படுவர் அத்துடன் கோயில்களில் அபிஷேகம் நடத்த தடை ஏற்படும் இந்த பிரச்னை தீர இவளை பனை ஓலை விசிறி கொண்டு வீசி எலுமிச்சை ரசம் கலந்த சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும்