குழந்தைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுங்கள் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
தொட்டில் பழக்கம் தான் கடைசி வரைக்கும் வரும் என்பார்கள். குழந்தைகள் முன் நாம் எப்படி நடக்கிறோமோ, அதைத்தான் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் முன் எந்நேரமும் மொபைல் பார்த்தால், அவர்களும் அதைக் கேட்டு பிடிவாதம் செய்வார்கள். இரண்டு கருவாடு வியாபாரிகள், இரவு வேளையில் ஒரு நறுமணப்பொருள் விற்கும் வியாபாரி வீட்டில் தங்க நேர்ந்தது. இருவரும் துõக்கம் வராமல் புரண்டனர். கருவாடு வாசனையில் துõங்கிப்பழகிய அவர்களுக்கு, அங்கு வீசிய நறுமணம் பிடிக்கவில்லை. வெளியே வைத்திருந்த கருவாடு கூடைகளை எடுத்து வந்து தங்கள் அருகில் வைத்துக் கொண்டனர். அதன்பிறகு நறுமணம் குறைய, கருவாடு வாசனை கும்மென்று இருந்தது. அவர்கள் நிம்மதியாக உறங்கினர். அவரவர் பழக்க வழக்கமே அவரவருக்கு வசதிப்படும். எனவே, குழந்தைகள் முன்னும் பெற்றோர் நல்லபடியாக நடந்து கொண்டால், குழந்தைகளும் நன்றாகவே வளர்வார்கள்.