விநாயகருக்கு பிடித்த செவ்வாய் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
விநாயகருக்கு பிடித்த செவ்வாய் சிவனுக்குரிய பிரதோஷத்துக்கு சனிக்கிழமை முக்கியம். அதுபோல விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று வந்தால் மிகச்சிறப்பு. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு விநாயகர் ஒருமுறை சாபவிமோசனம் கொடுத்தார். எனது நாளில் சதுர்த்தி திதி வந்து அன்று யார் தங்களை வணங்குகிறார்களோ அவர்களுக்கு நான் தரும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தடைகள் நீங்கும் என விநாயகருக்கு செவ்வாய் வாக்களித்தார்.
நவ 12, 2024