உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கார்த்திகை தீபவிழா தத்துவம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

கார்த்திகை தீபவிழா தத்துவம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

கார்த்திகை தீபவிழா தத்துவம் கடவுளை தீபமாக வழிபடும் வழக்கம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. அக்காலத்தில் பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானுõறு, நற்றிணை போன்ற நுõல்களில் உள்ளன. சிவனின் நெற்றிக்கண் அக்னி சொரூபமானது. மின்சார வசதி வந்துவிட்ட இந்தக் காலத்திலும், சுவாமி எழுந்தருளும் போது தீப்பந்தம் ஏற்றிச் செல்லும் வழக்கம் மாறுபடாமல் இருக்கிறது. வீடுகளில், திருக்கார்த்திகையன்று மட்டுமின்றி, கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசல்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இருக்கிறது. அவ்வாறு தீபமேற்றும் போது, நமச்சிவாய, சிவாயநம, சரவணபவ, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களைக் காது குளிரக் கேட்கலாம். சிவ என்றால் பரம மங்களம். ஒருவன் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் சிவசிவ என்று சொன்னால் அது சுருங்கிப்போகும். மேலும், பாவம் செய்யாத மனநிலையும் ஏற்படும்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை