உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கார்த்திகை தீப விழா விரதம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

கார்த்திகை தீப விழா விரதம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

கார்த்திகை தீபத்தன்று காலையில் சிவன் மற்றும்ö முருகப்பெருமானின் படத்துக்கு மாலை அணிவித்து, குத்து விளக்கேற்றி வணங்க வேண்டும். சிவ, முருகனுக்குரிய பாடல்களைப் பாடி, ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கந்தகுரு கவசம் போன்றவை அவர்களுக்கு மிகவும் பிடித்தவை. அன்று காலையில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மதியவேளையில் சிவனுக்கும், முருகனுக்கும் எலுமிச்சை சாதம் படைத்து, அதை உண்பது சிறந்தது. நெருப்பாய் இருக்கும் சிவனுக்கும், நெருப்பில் பிறந்த முருகனுக்கு குளிர்ந்த எலுமிச்சை மிகவும் உகந்தது. மாலையில் கார்த்திகை விளக்குகளை வீடெங்கும் ஏற்றி, பிடி கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அதை பிரசாதமாகத் தருவதன் மூலம் சகல வளமும் வீட்டுக்கு கிடைக்கும். இரவில் கோவில்களில் நடக்கும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் எரியும் நெருப்பை சிவனாகக் கருதி வழிபட வேண்டும்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை