உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கிரகங்கள் பெயர்ச்சி காலம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கிரகங்கள் பெயர்ச்சி காலம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கிரகங்கள் பெயர்ச்சி காலம் குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி பற்றிய அறிவு தற்போது பெருகியிருக்கிறது. இவை மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுவதாக நம்புகின்றனர். கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் காலத்தையே கிரகப்பெயர்ச்சி என்பர். இதற்கான காலம் தெரியுமா? சூரியன்- ஒரு மாதம், ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியிலும் சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயரும். உதாரணமாக ஆவணி என்பது சிம்ம ராசியில் சூரியன் இருக்கும் காலம். இதையடுத்து கன்னிக்கு பெயர்ந்து விட்டால், அது புரட்டாசி மாதம். சந்திரன்-இரண்டரை நாட்கள். இது எந்த ராசியில் இருக்கிறதோ, அந்த ராசியினர் மனபலம் இழப்பர். இதையே சந்திராஷ்டமம் என்பர். புதன்-ஒரு மாதம் வியாழன் என்ற குரு- ஒரு வருடம் வெள்ளி என்ற சுக்கிரன்- ஒரு மாதம் சனி- இரண்டரை வருடம் ராகு, கேது-ஒன்றரை வருடம் சனி, குரு, ராகு, கேதுவின் சஞ்சார காலம் மட்டும் சிறிதளவு அவ்வப்போது மாறுபடும்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை