ஆள் அரி என்றால் யார் தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஆள் அரி என்றால் யார் தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar இரண்யனைக்கொன்று பிரகலாதனைக் காத்த நரசிம்மர் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நரன், சிம்மம் என்பதே நரசிம்மம் ஆயிற்று. நரன் என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். மனிதன் பாதி, சிங்கம் பாதி கலந்து வடித்த அழகு வடிவினரே நரசிம்மர். இவருக்கு இன்னொரு பெயர் தான் ஆள் அரி. மனிதர்களை இந்த ஆள், அந்த ஆள் என்று சொல்வோம் இல்லையா? அதை தன் பெயராக வைத்துக் கொண்டார் நரசிம்மர். அரி என்றால் சிங்கம். அரிமா என்பதன் சுருக்கம் இது. இதையே ஹரி என்பர். அதிகாலையில் எழுந்ததும், ஹரி ஹரி என ஏழுமுறை சொன்னால், அன்றைய செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் என்பர். தன் பக்தன், பிரகலாதனின் தந்தையான இரண்யனைக் கொல்லுமளவு நரசிம்மர் ஒன்றும் கொடியவர் அல்ல. ஒரு சாபத்தின் விளைவாக, வைகுண்டத்தில் காவலனாக இருந்த விஜயன் என்பவன் இரண்யனாக, அசுர குணத்துடன் பிறந்தான். சாப விமோசனம் கேட்ட போது, திருமாலின் கையாலேயே மரணமடைய வேண்டும் என வேண்டினான். மரணத்தில் கூட, தன் சேவகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவரே, நரசிம்மர்.