/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் தங்கியது எப்படி? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் தங்கியது எப்படி? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஒரு பங்குனி மாதம், வளர்பிறை, சப்தமி திதி, சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கும்போது ரங்கநாதர், அயோத்தியிலிருந்து இங்கு வந்து சேர்ந்தார். பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து, ரங்க விமானத்தைப் பெற்றார். பாற்கடலில் இருந்து இது வெளிப்பட்டது. நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இஷ்வாகு குல மன்னர், தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஜன 08, 2025