நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தவறு என்றால் சிறியவரோ பெரியவரோ யார் செய்தாலும் தவறு தான். சிறியவர்கள் செய்யும் தவறுகளை பெரியவர்கள் தட்டிக் கேட்க உரிமைப்பட்டிருப்பது போல பெரியவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அதையும் பக்குவமாக வார்த்தைகள் தடிக்காமல் வயதில் சிறியவர்களும் தட்டிக் கேட்கலாம். இதற்காக பயம் ஏதும் தேவையில்லை. இறையனார் என்னும் சிவனே செய்யுள் ஆசிரியர் எனத்தெரிந்தும் அதைப் பக்குவமாகத் தட்டிக் கேட்டவர் நக்கீரர். சிவன் எழுதிய “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது செறியெயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே!” என்ற பாடலை தினமும் மூன்று முறை சொல்பவர்களுக்கு பெரியவர்கள் செய்யும் தவறைத் தட்டிக் கேட்கும் மனப்பக்குவமும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் தைரியமும் ஏற்படும்.