உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / உற்சாகம் தரும் ஹோலி கொண்டாட்டம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

உற்சாகம் தரும் ஹோலி கொண்டாட்டம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இன்று ஹோலி பண்டிகை, ஹோலி என்றால் புனிதம், தியாகம் என்றெல்லாம் பொருள் உண்டு. மனிதனின் மனதில், தான் என்ற ஆணவம் நிறைந்து கிடக்கிறது. இப்படித்தான், தன்னை நெருப்பு கூட அழிக்காது என்று ஆணவம் கொண்டிருந்தாள் ஹோலிகா என்ற பெண். இவளை, பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யனின் சகோதரி என்பர். பிரகலாதன் தனக்கு அடி பணியாததால், அவனைத் தீயில் போடும்படி, ஹோலிகாவுக்கு உத்தரவிட்டான். அவ்வாறு குதிக்கும் போது, தன் மேல், அக்னி தேவனிடமிருந்து பரிசாகப் பெற்ற நெருப்பு பிடிக்காத போர்வையைப் போர்த்தியிருந்தாள், ஹோலிகா. கணநேரத்தில் காற்று வீச போர்வை பறந்து சென்று பிரகலாதனை மூடியது. ஹோலிகா இறந்து விட்டாள். நாராயணனின் அருளால் பிரகலாதன் பிழைத்தான். அது மட்டுமல்ல, ஹோலிகா தன் கண்ணில் படும் குழந்தைகளை விழுங்கியும் விடுவாள். அரக்க குணமுள்ள அவள் அழிந்த நாள் அவளது பெயரால் ஹோலி என கொண்டாடப்படுகிறது. ஹோலிகாவின் மரணத்தால் மகிழ்ந்த மக்கள் தங்கள் மேல் வண்ணங்களை வாரி இறைத்து கொண்டாடினர். அந்த வழக்கம் இன்றும் நீடிக்கிறது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !