உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வாழ்க்கை ஒரு செல்லாக்காசு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வாழ்க்கை ஒரு செல்லாக்காசு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வாழ்க்கை ஒரு செல்லாக்காசு சாவித்திரி என்ற சொல்லுக்கு வல்லவள் என்று பொருள். பேச்சுத்திறனும், சமயோசித புத்தியும் உடையவள். எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானை மீட்க, அவனை தன் சொற்களால் மடக்கியவள். இறந்தவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் கேள், என்று எமன் புத்திசாலித்தனமாக கேட்க, அவனை விட புத்திசாலியான சாவித்திரி, “எனக்கு நுõறு பிள்ளைகள் வேண்டும்,” என்றாள். கணவனை இழந்தவளுக்கு பிள்ளை பிறப்பது எப்படி சாத்தியம்? வேறு வழியின்றி, சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான் எமன். சாவித்திரியின் மாமனார்- மாமியார் பார்வையற்றவர்கள். தங்கள் அரசை எதிரிகளிடம் இழந்தவர்கள். தவமிருக்கும் ஒருவன் கண்களை மூடிக்கொள்கிறான். அப்போது அவனும் குருடனாகவே இருக்கிறான். தவத்தின் மூலம், இந்த உலக வாழ்க்கை எத்தகையது என்பதை புரிந்து கொள்கிறான். இந்த தபஸ்வியின் அத்தனை அனுபவமும், சத்தியவானின் தந்தைக்கும் காட்டில் கிடைத்தது. “நீ மகாராஜாவாக இருக்கும் போது, எவ்வளவு அதிகாரங்கள் செய்தாய்? இப்போது உன் நிலையைப் பார்த்தாயா?” என்ற கேள்விகள் அவனுள் எழுந்தன, வாழ்வின் யதார்த்தத்தை அவன் புரிந்து கொண்டான். எவ்வளவு தான் பணம், செல்வாக்குடன் வாழ்ந்தாலும், அதை இழந்து விட்டால் செல்லாக்காசு என்பதை சாவித்திரியின் வரலாறு மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். காரடையான் நோன்பான இன்று இது ஒரு சிறந்த சிந்தனை தானே!

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை