அய்யனார் திருக்கோயிலில் அபிஷேக ஆராதனை!
அய்யனார் திருக்கோயிலில் அபிஷேக ஆராதனை! தேனி மாவட்டம் தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு செந்தட்டி அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயில் இன்று அதாவது 17/9/25 புதன்கிழமை விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா சுவாமிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது . முன்னதாக கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ விஸ்வகர்மாவுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விஸ்வகர்மா சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாடு பூஜையை கண்டு தரிசித்தனர்.