உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சத்ய சாய்பாபா அற்புதங்களை விளக்கும் அனந்தா வெப் சீரிஸ் டீசர் வெளியீடு! Anantha | Durga Stalin

சத்ய சாய்பாபா அற்புதங்களை விளக்கும் அனந்தா வெப் சீரிஸ் டீசர் வெளியீடு! Anantha | Durga Stalin

சத்ய சாய் பாபாவின் அருளால், ஐந்து பேரின் வாழ்க்கையில் நடந்த அற்புதம், வெப் சீரிஸாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சென்னையில் வெளியிட்டார். இந்தத் தொடரை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் மேற்பார்வையில், டாடா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். தேவா இசையமைக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். விழாவில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது: இது மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. அனந்தம் படத்தின் டீசரை, துர்கா ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த படம், பக்தி இழையோடும் படமாகவும், வெப் தொடராகவும் இருந்தாலும், இது, பெரிய திரைக்கு ஏற்ற வகையில், விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்டுள்ளது. இது, பாபாவின் அருளால் நிகழ்ந்துள்ளது. அவரது பக்தர்கள், இதை பார்க்கும் போது, அவரையே தரிசித்த உணர்வை பெறுவர். உண்மையான அன்பு, மனிதாபிமானம், அனைவருக்கும் உதவும் குணம் உள்ளிட்ட, சாய்பாபாவின் உயர்ந்த போதனைகளை, இந்த படம் வெளிப்படுத்தும், என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில், நடிகர்கள் தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி