அரசமரம் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் இரட்டை பிள்ளையார் கோயிலில் 15 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் அமர்நாத், உப தலைவர் குபேந்திரன், குபேந்திரனாத், கெளரவ தலைவர் சரவணன், சட்ட ஆலோசகர் சுதர்ஸன்பாபு உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
ஆக 31, 2026