வாழைப்பழத்தின் சிறப்பு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
வாழைப்பழத்தின் சிறப்பு எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை செய்வதாக இருந்தாலும் சரி...எந்தப்பழம் படைக்கிறார்களோ இல்லையோ...இரண்டு வாழைப்பழம் இல்லாமல் பூஜை நடப்பதில்லை. வாழைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என தெரியுமா? மற்ற பழங்களைச் சாப்பிட்டு விட்டு, கொட்டையை வீசி எறிந்தால், மீண்டும் முளைத்து விடும். பறவைகள் கூட பழத்தை சாப்பிட்டு விட்டு, கொட்டையை எங்காவது போட்டு விடும். அங்கே மரம், செடி முளைக்கிறது. ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ, தோலையோ வீசி எறிந்தால், முளைக்குமா என்றால் முளைக்கவே முளைக்காது. இது பிறப்பற்ற நிலையைக் காட்டுகிறது. தெய்வத்தை வணங்குவதன் நோக்கமே, மீண்டும் மீண்டும் பிறந்து, உலகத்தில் கிடந்து கஷ்டப்படக்கூடாது என்பதற்கு தான். எனவே, பிறப்பற்ற நிலை வேண்டியே, பூஜையின் போது, வாழைப்பழத்தை தவறாமல் படைக்கிறார்கள்.