/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சதுர்த்தி விழா நாட்களில் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் சிம்மம், குதிரை, காளை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் முக்கிய விழாவான கஜமுக சூரசம்ஹாரம் 23ம் தேதி நடந்தது. சதுர்த்தி விழாவின் 9ம் நாள் விழாவான செவ்வாயன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. பெரிய தேரில் உற்சவரான ஸ்ரீகற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.
ஆக 26, 2025