காமம் - கோபம் இரட்டை பிறவிகள்! | Arathin Kural | DinamalarAnmeegam
டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவாளர். கால்நூற்றாண்டு காலம் தினமணியில் துணையாசிரியராக பணிபுர்ந்து, தற்போது அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார் இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞானவாரிதி, தெய்வத் தமிழ் மாமணி உள்ளிட்ட பல பட்டங்கள் பரிசுகளைப் பெற்றவர். ஸ்ரீ அரவிந்தரின் திருச்சரிதம், நளசரிதம், ஸ்ரீ அன்னையின் திருச்சரிதம் அபூர்வ ராமாயணம் போன்ற ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அறம் வெல்லும்…பாவம் தோற்கும்… ஒவ்வொரு வாரமும் மத்வாச்சார்யார்கள், மகான்கள், சித்தர்கள் மற்றும் மகாபாரதம், ராமாயணத்திலிருந்து நன்நெறிக் கதைகளை சொல்லி நல் வழி காட்ட வருகிறார் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன். உணர்வுகளுக்கு அடிமையாகாமல் நீதி, நேர்மை, கொடை போன்ற உயரிய குணங்களைக் கொண்டு சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான பாதையாக அமையும் அறத்தின் குரல் என்ற இந்த புதிய தொடர். வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அறத்தின் குரல் என்ற தலைப்பில் தினமலர் ஆன்மிகம் சேனலை தவறாமல் பாருங்கள். தொடர்ந்து உங்களை பார்க்கத் தூண்டும் வகையில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.