/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவர் மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாளம் இசைக்க பக்தர்கள் பட்டாடை, வளையல், இனிப்பு வகைகள், பழங்கள், திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட மங்களப் பொருட்களை சீர்வரிசையாக எடுத்துச் சென்றனர். சுவாமியுடன் பச்சை பட்டு உடுத்தி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் பிரவேசித்தார். வேத மந்திரம் முழங்க அம்மனுக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது
ஏப் 16, 2025