நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் !
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் கோலாகலமாக நடந்தது. முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்தார். அவரது விக்ரகம் முழுதும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். வைகுண்ட ஏகாதசி பெருவிழா இனிதே நிறைவுபெற்றது.
ஜன 20, 2025