உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பூச நட்சத்திர தினத்தில் உதித்த சூரிய பகவானுக்கு தீபாராதனை | Palani | Thaipoosam festival

பூச நட்சத்திர தினத்தில் உதித்த சூரிய பகவானுக்கு தீபாராதனை | Palani | Thaipoosam festival

தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் நாள் விழாவான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ