பாம்பன் சுவாமியின் அறிவுரை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
முருக பக்தரான பாம்பன் சுவாமி, முருகப்பெருமான் மீது பாடிய பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 6666. இதைக் கூட்டினாலும் ஆறு தான் வரும். ஆறுமுகப்பெருமான் மீது பாடியதாலோ என்னவோ, எண்களும், கூட்டு எண்ணும் ஆறு வருமாறு பார்த்துக் கொண்டுள்ளார். எது கொடிய பாவம், என்னென்ன செயல்கள் செய்யக்கூடாது என்பது பற்றி, இவர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுரையைக் கேளுங்கள். * தன்னையே உயர்ந்தவனாகக் கருதி மற்றவர்களை மட்டம் தட்டுவது கொடிய பாவம். * பொய் சாட்சி சொல்வது கொடிதினும் கொடிய பாவம். * மனசுத்தம் இறைவனை வணங்குவது பாவத்தில் பெரிய பாவம் * நமக்கு உதவி செய்தவர்களின் மனதை நோகச் செய்வது கொடும் பாவம் * விஷம் கொடுத்து கொல்வது பிராயச்சித்தமே இல்லாத பாவம் * தான் என்ற ஆணவத்துடன் கடவுளையே நிந்திப்பது பெரும் பாவம். இனியேனும், இத்தகைய பாவங்களை மனதால் கூட நினைக்காமல் இருக்க வேண்டும் தானே!