மச்சக்கார ஐயப்பன் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மச்சக்கார ஐயப்பன் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் மெட்டு தர்மசாஸ்தா கோவிலில் குழந்தை வடிவிலான சாஸ்தாவைத் தரிசிக்கலாம். சபரிமலை பாணியில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. குழந்தை வடிவ மூலவரை பாலசாஸ்தா என்கின்றனர். இந்த விக்ரகம். பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்தில் உள்ளது. வலது கன்னத்தில் குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது போல, யோக மச்சம் உள்ளது. இந்த மச்சத்தை அபிஷேக காலங்களில் தரிசிக்கலாம். இவரை மச்சக்கார ஐயப்பன் என்றும் அழைக்கின்றனர். குழந்தை வடிவில் விளங்குவதால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வழிபாடு செய்கின்றனர். சபரிமலையைப் போல, இங்கும் மண்டலபூஜை நடத்தப்படும். இப்பகுதி மக்கள் சபரிமலை செல்வதற்காக இங்குவந்து மாலை அணிகின்றனர். மகர ஜோதி அன்று இங்கும் கோவில் எதிரில் ஜோதி தீபம் காட்டப்படுவது மற்றொரு சிறப்பு.