திருவொற்றியூர் தியாகராஜசுவாமி, வடிவுடையம்மன் நவராத்திரி திருவிழா ஆரம்பம்..
#திருவொற்றியூர் #அருள்மிகு #தியாகராஜசுவாமி #வடிவுடையம்மன் #திருக்கோயில் #நவராத்திரி #திருவிழா #tamilotaku #templefestivals #divinecelebration #spiritualjourney #culturalheritage #festivalseason #tamilnadu #devotion #hashtag #nowplaying #traditionandculture #worship #navarathiri #tamilnadu #templevolge #lord #worship உலகம் புகழ்ந்த தொண்டை வள நாட்டில் 32 சிவ ஸ்தலங்களுள் நடுநாயகமாக விளங்கும் சென்னை திருவொற்றியூரில், அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில். ஒன்பது நாட்கள் நடக்கவிருக்கும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள இந்த நவராத்திரி திருவிழா அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி திருவிழாவின் முதல் நிகழ்வாக வடிவுடையம்மன் கோவில் பிரகாரத்தில் கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உற்சவர் மற்றும் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பக்தர்கள் முன்னிலையில் நவதானியங்களை குழியில் போட்டு அதற்கு சிறப்பு தீப தூப ஆராதனைகள் செய்து பந்தல்கால் நடும் நிகழ்வானது நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நவராத்திரி 9 நாட்களும் அன்னைக்கு தபசு அலங்காரம் பராசக்தி அலங்காரம் நந்தினி அலங்காரம் கௌரி பத்மாவதி உமா மகேஸ்வரி ராஜராஜேஸ்வரி சரஸ்வதி என அலங்காரங்கள் செய்யப்பட்டு தினமும் வீதி உலா மற்றும் மாடவீதி உற்சவம் நடைபெறும் தினமும் இத்திருத்தல வளாகத்தில் பக்தி இசை நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்வாலயத்தில் வடகிழக்குப் பகுதியில் சக்தி சொரூபியாகிய இருக்கும் பராசக்தி தேவியை தர்பைநாயகியாகியாகவும், திரிபுரசுந்தரி என்னும் திருநாமத்தையும் திருநாவுக்கரசர் பெருமானால் வடிவுடைநாயகி எனவும் பெயர்கொண்டவளாய் பக்தர்களால் வணங்கப்படுகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் சிறப்புடைய இந்த அம்பிகையை தரிசித்து அன்னையின் அருளைப்பெருவோம்.