/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஆடி வெள்ளி ஸ்பெஷல் - ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் வரலாறு | Oothukaaduamman
ஆடி வெள்ளி ஸ்பெஷல் - ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் வரலாறு | Oothukaaduamman
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு என்ற ஊரில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜய நகர மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணதேவராயர், ஒரு நாய் துணையோடு காட்டுக்கு வேட்டையாட சென்றனர். வேட்டையாடுவதில் மட்டுமே அவர் ஆர்வம் இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. தாகம் எடுத்த போது, மன்னன் நீர் நிலைகளை தேடி அலைந்தார்.எங்கும் இல்லை. ஒரு கட்டத்தில் சோர்வாகி மரத்தடியில் அமர்ந்து விட்டார். உடன் வந்த நாய், மன்னன் நிலைமையை புரிந்துக்கொண்டு நீரை தேடி அலைந்தது. தனது உடலை நீரில் நனைத்து மன்னனை நோக்கி விரைந்தது. உடலை சிலிர்த்தது. அதில் இருந்து தெறித்த நீர் மன்னன் முகத்தில் பட்டு கண் திறந்தான்.
ஜன 01, 2026