உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கடவுளே எனக்கு கஷ்டத்தைக் கொடு - என்று வேண்டுபவர் உண்டா? | வழிகாட்டும் வாழ்வியல் | Dinamalar Anmeegam

கடவுளே எனக்கு கஷ்டத்தைக் கொடு - என்று வேண்டுபவர் உண்டா? | வழிகாட்டும் வாழ்வியல் | Dinamalar Anmeegam

வாழ்வியல் வழிகாட்டி - வெள்ளிக்கிழமை - மாலை 4 மணிக்கு... சுவாமி ஸ்ரீராம் சரண அரவிந்த தாஸ் பற்றிய ஒரு அறிமுகம்: தமிழ்நாட்டில் புகழ்மிக்க திவ்ய ஸ்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்தவர் சுவாமி ஸ்ரீராம் சரவண அரவிந்த தாசன். இன்ஜினியரிங் முடித்து வெளிநாடுகளில் இருக்கும் மிகப் பெரிய வங்கிகளில் மேனேஜராக பணியாற்றினார். அதன்பிறகு மக்களுக்கு பகவத் கீதையினுடைய அற்புத கோட்பாடுகளை கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கடந்த பல வருடங்களாக இஸ்கான் அமைப்பு நிர்வாகத்தின் உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு மக்களுக்கு நற்சிந்தனைகளை புகட்டிவருகிறார். இந்த நோக்கத்துடன் நிறைய நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். அஞ்ஞானத்தில் மூழ்கி ஏராளமான சந்தேகங்களுக்கு விடை தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு… விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தினமலர் ஆன்மிகம் சேனலுக்காக வாழ்வியல் வழிகாட்டி என்ற இந்த தொடர் மூலம் வாரந்தோறும் வாசகர்களை சந்திக்க இருக்கிறார். வாழ்வில் நம் மனதுக்குள் புதைந்து கிடக்கும் அறிவுப்பூர்வமான, ஆன்மீக கேள்விகளை வாசகர்கள், கமெண்டில் போடலாம். அதற்கு பதில் தர காத்திருக்கிறார் சுவாமி ஸ்ரீராம் சரவண அரவிந்த தாசன் அவர்கள். சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு உங்கள் தினமலர் ஆன்மிகம் யூடியூப் சேனலில்… இஸ்கான் இஸ்கான்...(ISKCON) அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்… International Society for Krishna Consciousness - என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கம். உலகம் முழுவதும் பகவத் கீதையினுடைய கோட்பாடுகள், சனாதன தர்மத்தினுடைய வாழ்வியல் முறை, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டியை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஹரே கிருஷ்ணா என்று சொல்லக்கூடிய மாபெரும் இயக்கம் இஸ்கான். இந்தியாவிலும், ஒவ்வொரு கிராம, நகரத்திலும் ஆன்மிக வாழ்வை மனித குலம் அனைத்துக்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இதன் மூலம் மக்கள் தங்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக மாற்றிக் கொள்ள வழிகாட்டிக் கொண்டிருக்கிறது இஸ்கான் அமைப்பு.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை