திருவொற்றியூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை பாயுமா
திருவொற்றியூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை பாயுமா | Bribe | Women JE Manchula | Tiruvottiyur Corporation | Chennai சென்னை திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்தவர் மணி. கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். பொருட்கள் மழையில் நனையாமல் பாதுகாக்க கடையில் மேற்கூரை அமைக்கும் பணியில் மணி ஈடுபட்டார். ஸ்பாட்டுக்கு விரைந்த மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் மஞ்சுளா, அனுமதியின்றி மேற்கூரை அமைப்பதாகக் குற்றம் சுமத்தினார். இதைக்கண்டு கொள்ளாமல் இருக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். சொந்த இடத்தில் தகர கொட்டகை அமைக்க எதற்காக லஞ்சம் தரனும் என மணி கேட்டார். அதற்கு இளநிலைப் பொறியாளர், லஞ்சம் தர மறுத்தால் கடைக்கு சீல் வைப்பேன். நான் சொல்லும் பெண்ணிடம் இரண்டாயிரம் ரூபாய் உடனே கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு சென்றார். இதையடுத்து மஞ்சுளாவின் பெண் உதவியாளருக்கு ஜிபே மூலம் இரண்டாயிரம் ரூபாயை மணி அனுப்பினார். இதுகுறித்து 7-வது வார்டு மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கார்த்திக்கிடம் மணி கூறினார். மணியை, கார்த்திக் அழைத்து சென்று மாநகராட்சி மண்டல செயற்பொறியாளரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் முதல்வர் விஜய் ஆட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.