உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / குழந்தைகள்முதல் பெரியவர் வரை,உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்|Chennai |Dinamalar Apartment Celebration

குழந்தைகள்முதல் பெரியவர் வரை,உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்|Chennai |Dinamalar Apartment Celebration

குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம் / Chennai / Dinamalar Apartment Celebration அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் நாளிதழ் சார்பில், கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஜமீன் பல்லாவரம், அலையன்ஸ் கேலரியா ரெசிடென்சஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழுடன் இணைந்து, ஓஎம்ஆர் அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், பெப்ஸ், ரூரா ஹாலிடேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கைகோர்த்தன. நிகழ்ச்சியில் குடியிருப்பின் குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை 600க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சி வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கான ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெற்றன. மினி மாரத்தான், மெதுவாக சைக்கில் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். நவராத்திரி தாண்டியா ஆட்டமும் நடைபெற்றது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளால், இரவு வரை குடியிருப்பு வளாகமே உற்சாகத்தில் அதிர்ந்தது.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை