உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தினமலர் கார்னிவெல் அப்பார்மென்ட் செலிபிரேஷன் செம ஜாலி

தினமலர் கார்னிவெல் அப்பார்மென்ட் செலிபிரேஷன் செம ஜாலி

தினமலர் கார்னிவெல் அப்பார்மென்ட் செலிபிரேஷன் செம ஜாலி | Apartment Celebration | Dinamalar சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த ஓஎம்ஆர் சாலை, காரப்பாக்கம் அப்பார்ட்மென்ட் குடியிருப்பில் நடந்த, தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். அப்பார்ட்மென்ட் குடியிருப்பு வாசிகளை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் சார்பில், கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது. அந்த வகையில், சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலை, காரப்பாக்கத்தில் உள்ள தோஷி ரைசிங்டன் என்ற அப்பார்ட்மென்ட்டில் தினமலர் கார்னிவெல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் செம ஜாலியா துவங்கியது. இதில் தினமலர் நாளிதழ் மற்றும் ஓஎம்ஆர் அப்போலோ ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டலுடன் ஏசிடி பைபர், காசா கிராண்ட், கிட்டீ பட்டீ, மற்றும் பெப்ஸ் இந்தியா பேவரெட் ஸ்ப்ரிங் மேட்ரிஸ் ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்தன. அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் குட்டீஸ் முதல் பெரியவர் வரை 300க்கும் மேற்பட்டோர் மாலை 5 மணி முதல் மினி மாரத்தான், ஸ்லோ சைக்கிள், மேஜிக் ஷோ, கோலப்போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்டவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அப்போலோ ஹாஸ்பிடல் சார்பில் இலவச மருத்துவ மையம், ஆடை விற்பனை, தினமலர் புத்தக விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரங்குகளை குடியிருப்பில் வசிப்பவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். ஜம்பிங் பலுான், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி, லைவ் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இதோடு, வசனங்களின்றி நடிப்பு திறனை வெளிப்படுத்தும், மைம் ஷோவும் நடைபெற்றது. மினி மாரத்தான், சைக்கிளை மெதுவாக இயக்குதல், மேஜிக் ஷோ, கோலப்போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்டவற்றில், குடியிருப்பு மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போலோ ஹாஸ்பிடல் மூலம் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பார்ட்மென்ட் வளாகம், இரவு 9 மணி வரை விழாக்கோலம் பூண்டது.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை