உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி

பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி

பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி | Chennai | Cockroach Found in Milk Packet | Aavin Administration Apologizes சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கடந்த 15ம் தேதி ஆவின் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். 18ம் தேதி அந்தப் பால் பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு, அத்துடன் தனக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும், குழந்தைகளுக்குப் பாலை முதன்முறையாக அறிமுகப்படுத்த நினைக்கும் பெற்றோர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் மன்னிப்பு கோரியதாகவும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை