உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சென்னையை உலுக்கிய மெகா வழிப்பறி சம்பவம் | 10 robbery incident | encounter with robber | Chennai

சென்னையை உலுக்கிய மெகா வழிப்பறி சம்பவம் | 10 robbery incident | encounter with robber | Chennai

1 மணி நேரத்தில் 10 வழிப்பறி சம்பவம் வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் டிஸ்க்: சென்னையை உலுக்கிய மெகா வழிப்பறி சம்பவம் / 10 robbery incident / encounter with robber / Chennai சென்னையில் செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சைதாப்பேட்டை துவங்கி வேளச்சேரி வரை அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் ஆறு பெண்களிடம் 22 பவுன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. சென்னையை உலுக்கிய 10 நகை பறிப்பு சம்பவங்களால் அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உ.பி.யை சேர்ந்த இருவர் விமானம் மூலம் ஐதராபாத் செல்ல முயன்றபோது போலீசார் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தனர். வழிப்பறி சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஜாபர், தரமணி ரயில்வே ஸ்டேஷன் அருகே பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்க போலீசார் அவனை அழைத்து சென்றனர். அங்கு ஜாபர் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டான். தற்காப்புக்காக திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி கொள்ளையன் ஜாபரை நோக்கி சுட்டதில் அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஸ்பாட்டிலேயே உயிரிழந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜாபர் மீது மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய மெகா கொள்ளையன் ஜாபர் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்ற போலீசாரின் துணிச்சலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி