எதிர்கட்சியா இருந்தா ஒருபேச்சு; ஆளும் கட்சியாமாறினாஒரு பேச்சா | Chennai | Graduate teachers Struggle
எதிர்கட்சியா இருந்தா ஒரு பேச்சு; ஆளும் கட்சியா மாறினா ஒரு பேச்சா | Chennai | Graduate teachers Struggle ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் பணி நியமனம் வழங்கப்படவில்லை என தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் கைகளில் பாடப்புத்தகங்களை ஏந்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் தகுதி தேர்வு அதன் பிறகு நடைபெற்ற நியமன தேர்வு என இரண்டிலும் வெற்றி பெற்று காத்திருக்கும் தங்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்ற பட்டாதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 மாதங்களுக்கு மேலாகியும் 3 ஆயிரத்து192 பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வரும் பள்ளி கல்வித்துறையை கண்டித்து முழங்கங்களை எழுப்பினர். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என பாடல் பாடி எதிர்ப்பை பதிவு செய்தனர்