உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / விளையாட்டை வாழ்வின் முன்னேற்ற பாதையாக நினைக்கனும்: முயின் பெக் ஹபீஸ்

விளையாட்டை வாழ்வின் முன்னேற்ற பாதையாக நினைக்கனும்: முயின் பெக் ஹபீஸ்

விளையாட்டை வாழ்வின் முன்னேற்ற பாதையாக நினைக்கனும்: முயின் பெக் ஹபீஸ் | Chennai | Having belief in the goal is enough:Sai Sudharsan இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான 58 வது விளையாட்டு போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சாய் சுதர்சன், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய ஆடவர் கூடைப்பந்து அணி தலைவர் மூயின் பேக் ஹபீஸ், சென்னை ஐஐடி கல்வி நிறுவன இயக்குனர் காமகோடி ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளை சென்னை, ஹைதராபாத், திருப்பதி ஐஐடி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. பேட்மிட்டன், கூடைப்பந்து, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி, வாலிபால், தடகளம் என 13 வகையான போட்டிகள் நடைபெறும். 23 ஐஐடி கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3800 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிகள் இன்று முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.

டிச 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !