உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் குளோபல் சிலம்பம் அகாடமி சாம்பியன்

8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் குளோபல் சிலம்பம் அகாடமி சாம்பியன்

8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் குளோபல் சிலம்பம் அகாடமி சாம்பியன் / Chennai / India takes first place in International Open Silambam Competition with 33 medals கத்தார் நாட்டை சேர்ந்த ஆதிரன் சிலம்பம் சார்பாக கடந்த 3ம் தேதி சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இந்தியா, கத்தார், ஓமன், சவூதி அரேபியா, மலேசியா, ஸ்ரீலங்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக சென்னையை சேர்ந்த 2 சிலம்ப பள்ளிகளை சேர்ந்த வீரர்கள், மற்றும் ஈரோடு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒரு சிலம்ப பள்ளி வீரர்கள் இதில் பங்கேற்றனர். தனித்திறமை, தனிச்சண்டை, குழு போட்டிகளில் வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில், சென்னை குளோபல் சிலம்பம் அகாடமியை சேர்ந்த 15 வீரர்கள் மொத்தமாக 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இந்தியா சார்பாக வென்றனர். வெற்றி பெற்று தாயகம் திரும்பிய வீரர்களை பெற்றோர், மாணவர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி