/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தை உத்திராடம் நட்சத்திரத்தில் குவிந்த பக்தர்கள் | Tiruvottiyur | Guru Puja Festival
தை உத்திராடம் நட்சத்திரத்தில் குவிந்த பக்தர்கள் | Tiruvottiyur | Guru Puja Festival
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள இரட்டை சித்தர்கள் அப்பையா மற்றும் சுப்பையா ஜீவசமாதியில் தை உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அமாவாசை குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோ பூஜை மற்றும் அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புனித நீர் கலசங்கள் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்பையா, சுப்பையா சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சித்தர்களை வழிப்பட்டனர்.
ஜன 28, 2025