ஆசிரியர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு | Chennai | old Students Meet
ஆசிரியர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு | Chennai | old Students Meet திருவான்மையூர் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992 முதல் 2004 வரை கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் 11 ஆண்டுகளுக்கு பின் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களின் முன்னாள் ஆசிரியர்களுக்கு பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏந்தி, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் இன்னாள் மாணவர்களுக்கு 900 நோட்டுகள், பள்ளிக்கு தேவையான மைக் , டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.