துாய்மைப் பணியாளர்கள் பசியால் கண்ணீர் | CM Stalin is having fun watching a Coolie Movie
துாய்மைப் பணியாளர்கள் பசியால் கண்ணீர் / sanitation workers strike / CM Stalin is having fun watching a Coolie Movie சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை, மேட்டுப்பாளையம், காரமடை, கடலுார் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம் உள்ளிடவற்றை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அனுமதிகோரி மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று இன்று போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். இச்சூழலில் ஒப்பந்த நிறுவனம் விடுப்பு எடுத்த தொழிலாளர்களுக்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுத்தது. விடுப்பு நிராகரிக்க படுவதாகவும், அதையும்மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என கூறியது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மிரட்டல் கோவை மாநகராட்சி நிர்வாகமும் வாய்மொழியாக மிரட்டி உள்ளனர். இன்று காலை 7 மணி முதலே கோவை மாநகராட்சி அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தூய்மைப் பணியாளர்கள் கோவை மாநகராட்சியை நோக்கி அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். அவர்களை டவுன் ஹால் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை குண்டு கட்டாக கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். சம்பளம் கை வைக்கும் காரமடை நகராட்சி கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக 100 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் இவர்களில் சிலர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதைக் கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் விக்னேஷ், வனிதா, சஞ்சீவ் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏகே செல்வராஜ் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து காரமடை போலீஸ், நகராட்சி கமிஷனர், ஆணையாளர், தலைவர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு என்பது எட்டாக்கனியானது. ‛கூலி சினிமா ‛ஸ்டாலின் ஜாலி துாய்மைப் பணியாளர்களின் தாய்மைப் பணியை போற்றி அவர்களின் குறைகளை கலைந்திட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என உள்ளது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து தனது வீட்டு முன் அதிமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவரது தங்கையும், திமுக எம்பியுமான கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் மதுக்கடை ஒழிப்புக்கானது தான் என வாய்க்கு வந்ததெல்லாம் வாக்குறுதியாக அள்ளி விட்டார். துாய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி ஒன்பது நாட்களுக்கும் மேலாக சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஒரு நிமிடம் பேசுவதற்குக் கூட முதல்வர் ஸ்டாலின் முன் வரவில்லை. மாறாக ரஜினி நடித்த கூலி சினிமாவை பல மணி நேரம் கண்டு களித்து பரவசம் அடைந்தார். முதல்வர் ஸ்டாலினின் செயல், ‛ரோம் நகர் தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்த கதையாக இருப்பதாக பலதரப்பினும் குமுறி வருகின்றனர். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் அரசு என முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருவதெல்லாம் வெத்து வேட்டு பேச்சு என இப்போது நன்றாக புரிகிறது என துாய்மைப் பணியாளர்கள் குமுகின்றனர். இதற்கெல்லாம் வரும் 2026 தேர்தலில் தக்கப் பாடம் புகுட்டுவோம் என காத்திருக்கின்றனர்.