உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ஆண்கள் அணியில் 24 மாநில வீரர்கள், பெண்கள் அணியில் 16 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு

ஆண்கள் அணியில் 24 மாநில வீரர்கள், பெண்கள் அணியில் 16 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு

ஆண்கள் அணியில் 24 மாநில வீரர்கள், பெண்கள் அணியில் 16 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு / Thiruvottriyur / Tennis Ball Cricket Tournament தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில் தேசிய அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது. இப்போட்டி தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கத்தின் 50 வது ஆண்டு கோல்டன் ஜூப்ளி போட்டியாக நடத்தப்பட்டது ஆண்கள் பிரிவில் 24 மாநிலங்களில் இருந்தும், பெண்கள் பிரிவில் 16 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கோவா மற்றும் தமிழ்நாடு இடையே நடைபெற்ற போட்டியில் தமிழக வீராங்கனைகள் கோப்பையை கைப்பற்றினர். ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் மாகராஷ்டிரா அணி கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை