மேயரின் முதல் உத்தரவு
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின் தனது முதல் உத்தரவாக மேயர் அறையில் உள்ள தலைவர்களின் போட்டோக்களை மாற்ற உத்தரவிட்டார். ராமசாமி என்ற பெயரை தந்தை பெரியார் என்றும் அண்ணாதுரை என்ற பெயருக்கு பதிலாக பேரறிஞர் அண்ணா எனவும் மாற்ற வலியுறுத்தினார். மேயரின் முதல் உத்தரவை கட்சியினர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
ஆக 06, 2024