உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தை உலுக்கிய பாலியல் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய பாலியல் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய பாலியல் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை / abuse case / college students/ Pollachi 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்தனர். அவனுடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனிலிருந்த பல ஆபாச வீடியோக்களை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. திருநாவுக்கரசின் செல்போனை ட்ராக் செய்த போலீசார், வழக்கில் சபரிராஜன், சதீஷ்குமார் , வசந்தராஜன் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட மேலும் நான்கு பேரை கைது செய்தனர். ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணையில், மேலும், பாபு, அருளானந்தம் மற்றும் ஹெரன்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடைசி குற்றவாளியாக அருண்குமார் கைது செய்யப்பட்டார். விசாரணையில் 2016 முதல் பல பெண்களை கொடூரர்கள் கூட்டு பலாத்காரம் செய்த திடுக்கிடும் தகவல் உறுதியானது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஏழு பேர் நேரில் சென்று சாட்சி அளித்தனர். குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் முக்கிய ஆதாரமாக மாறியது. சிபிஐ சார்பில் சுமார் 1500 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது ஒன்பது குற்றவாளிகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கை நீதிபதி நந்தினி தேவி விசாரித்தார். தமிழகமே எதிர்பார்த்த பொள்ளாச்சி சம்பவத்தின் தீர்ப்பு இன்று வெளியானது. A2 குற்றவாளி திருநாவுக்கரசர் மற்றும் A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு தலா ஐந்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. A1 சபரிராஜன் 4 ஆயுள், A3 சதீஷ் மற்றும் A7 ஹெரன்பால் தலா மூன்று ஆயுள், A4 வசந்தகுமார் 2 ஆயுள், A6 பாபு, A8 அருளானந்தம் மற்றும் A9 அருண்குமாருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சாகும் வரை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, ஒன்பது குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை டு சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !