பெரியவர்களுக்கு ஏ.டி.எச்.டி. வந்தால் குணமாக்குவது எப்படி?
சமீபத்தில் ஒரு பிரபல நடிகருக்கு ஏ.டி.எச்.டி என்ற கவனம் சிதறல் மற்றும் துறு துறு வென்று இருக்கும் கோளாறு இருப்பதாக அறிவித்துள்ளார். ஏ.டி.எச்.டி என்றால் அட்டன்ஷன் டெபிசிட் ைஹபர் ஆக்டிவ் டிஸ்ஆர்டர் என்பது இதன் விரிவாக்கம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசி விடுவார்கள். இது நரம்பு மண்டலத்தில் வரும் சிறிய கோளாறு. குழந்தைகளாக இருக்கும் போதே இது இருந்திருக்கும். ஆனால் அதை சரியாக கவனிக்காத பட்சத்தில் வளர வளர இந்த கோளாறு வெளிப்படும். இதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளித்து அதன் தாக்கத்தை குறைப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 31, 2024