உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிலக்கடலை கழிவிலும் இருக்கு மதிப்பு கூட்டிய பொருள்

நிலக்கடலை கழிவிலும் இருக்கு மதிப்பு கூட்டிய பொருள்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில இருந்து இங்கிலாந்து சென்ற பேராசிரியர் ஒருவர் உயிர் கழிவுகளை எப்படி மேம்படுத்தி நானோ தொழில்நுட்பத்தின் மூலம் மதிப்பு கூட்டிய பொருளாக தயாரிக்க முடியும் என்பது குறித்து பயிற்சி பெற்றார். உதாரணத்துக்கு நிலக்கடலையில் உள்ள கழிவுகளை நாம் வீணாக்குகிறோம். ஆனால் அதில் உள்ள செல்லுலோசில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பஞ்சு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இது கனநீரில் உள்ள உலோகங்களை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பேராசிரியர் பின்லாந்தில் உள்ள பல்கலைக்கழகக்தில் பயிற்சி பெற்றுள்ளார். உணவு பொருட்களில் உள்ள வைட்டமின்களை எப்படி செறிவூட்டலாம் என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் பி 12ஐ செறிவூட்டி பயன்படுத்துவதில் பயிற்சி பெற்றுள்ளார். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !