கோவை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை
கோவை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை | ADMK | BJP | NDA | Annamalai | Congratulations | ADMK Candidates | Covai கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூன் மற்றும் சிங்காநல்லுார் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை அதிமுகவின் மாமலைகள் என அழைக்கப்படும் வேட்பாளர்கள் அம்மன் அர்ஜூன், கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை சந்தித்த அதிமுக வேட்பாளர்கள், ‛‛நாங்கள் வெற்றி பெற நீங்கள் எங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம், என்றனர். ‛‛கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு நான் வருவேன்; உங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். என்னால் முடிந்த வரைக்கும் உங்களுக்கு உதவி செய்வேன், என அண்ணாமலை உறுதியளித்தார். தொடர்ந்து அண்ணாமலையுடன் வேட்பாளர்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டு உற்சாகத்துடன் விடை பெற்றனர். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் பாஜக சார்பில் அண்ணாமலைக்கு சீட் கிடைக்கும். மருதமலை முருகன் சீட் கொடுப்பார் என அண்ணாமலை ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.