தெருக்கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்து தரப்பையும் சேர்த்து கூட்டம் நடத்தக் கோரிக்கை
தெருக்கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்து தரப்பையும் சேர்த்து கூட்டம் நடத்தக் கோரிக்கை | Apologies to Nirmala | Saran the Hotal Ower Srinivasan கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு நடந்தது. இதில் ஹோட்டல்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலானது. இதனால் அவர் அமைச்சர் நிர்மலாவை நேற்று சந்தித்து பேசினார். தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார். சங்கத்தில் விவாதித்த விஷயங்களை தான் பேசினேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் சிறிய கடை, பெரிய கடை அல்லது ஸ்டார் ஹோட்டல்கள், தெருவோர கடைகள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து ஒரு கூட்டத்தை நீங்கள் நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீனிவாசன் கூறினார்.