உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மரத்தின் அடி வேரை வெட்டிய ரயில்வே கான்ட்ராக்டர் | Arrange for tree removal | coonoor

மரத்தின் அடி வேரை வெட்டிய ரயில்வே கான்ட்ராக்டர் | Arrange for tree removal | coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் 6 கோடி ரூபாய் மதிப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் உள்ள நூற்றாண்டு பழமையான மகிழம் மரத்தை வெட்டி அகற்ற ஏற்பாடு நடந்தது. இதற்காக மரத்தை சுற்றிலும் படிப்படியாக மரணக்குழி வெட்டப்பட்டது. மரத்தின் வேர்கள் வெட்டப்பட்டன. மரம் கீழே விழுவதாக கூறி மரத்தை வெட்ட கான்ட்ராக்டர் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற்றார். பறவைகளின் வாழ்விடமாக இருக்கும் மரத்தை வெட்ட தன்னார்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டரிடம் புகார் கூறினர். கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வு நடத்திய வனத்துறையினர் மரத்தை வெட்ட தடை விதித்து மரத்தை சுற்றியும் தடுப்பு சுவர் எழுப்பி பாதுகாக்க உத்தரவிட்டனர். உத்தரவுகளை மீறி மரத்தை வெட்ட ரயில்வே அதிகாரிகள் துணையுடன் கான்ட்ராக்டர் பொக்லைன் பயன்படுத்தி மரத்தை சுற்றிலும் மீண்டும் மரணக்குழி வெட்டினார். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார், தன்னார்வ கூட்டமைப்பு கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் அங்கு சென்றனர். எங்கள் உயிரே போனாலும் மரத்தை வெட்ட அனுமதிக்க விட மாட்டோம் என ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி ரயில்வே அதிகாரிகள் மரத்தை சுற்றிலும் 10 அடி அளவிற்கு இடம் விட்டு தடுப்புச் சுவர் எழுப்பி மரம் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து மரம் வெட்டும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. மரத்தை காத்த தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ