/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மண்டல போட்டியில் முதலிடம் பிடித்த 11 அணிகள்| State Badminton Tournament
மண்டல போட்டியில் முதலிடம் பிடித்த 11 அணிகள்| State Badminton Tournament
கோவையில் இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில பூப்பந்து போட்டிகள் கோலாகமாக துவங்கியது. போட்டியை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் முரளிகிருஷ்ணன் உடனிருந்தார். இப்போட்டியில் மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த போட்டியில் ஈரோடு மண்டல அணி 2 - 0 என்ற செட் கணக்கில் திருநெல்வேலியையும், மதுரை அணி 2 - 0 என்ற செட் கணக்கில் வேலுார் அணியையும், கோவை மண்டல அணி 2 -1 என்ற செட் கணக்கில் திருச்சி அணியையும், காஞ்சிபுரம் மண்டல அணி 2 - 0 என்ற செட் கணக்கில் நாகை மற்றும் புதுச்சேரி அணியையும் வீழ்த்தின.
பிப் 19, 2024